பெங்களூரு: ஐபிஎல் தொடர் அறிமுகம் செய்த 2008ம் ஆண்டு முதல் ஆடி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி (ஆர்சிபி), கடந்த ஆண்டு நடந்த 18வது சீசனில் முதல்முறையாக சாம்பியன் பட்டதை வென்றது. நீண்ட நாள் காத்திருப்புக்கு பின் கிடைத்த வெற்றியால் அந்த அணியின் வீரர்கள், ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினர். பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்த வெற்றி விழா கொண்டாட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியாகினர். நாடு முழுவதும் உலக்கிய இந்த சம்பவம், ஆர்சிபி அணி மீது ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை விற்க அதன் உரிமையாளர் முடிவு செய்து உள்ளதாக கூறப்படுகிறது. ஆர்சிபியை நிர்வகித்து வரும் இங்கிலாந்தின் டயாஜியோ நிறுவனம், விற்பனைக்கான அணியின் மதிப்பீடு ரூ.17,719 கோடியாக (2 பில்லியன் டாலர்) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆர்சிபியின் 18 ஆண்டுகளில் முதல் வெற்றி மற்றும் பிராண்ட் மதிப்பு உயர்வு ஆகிய காரணங்களால் அடுத்தாண்டு மார்ச் இறுதிக்குள் விற்க டயாஜியோ நிறுவனம் முடிவு செய்து உள்ளது. இது, பெங்களூரு அணியின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
* 2026 ஐபிஎல்லில் தோனி ஆடுவாரா? - சிஎஸ்கே சொன்ன புதுதகவல்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் தோனி 2026 ஐபிஎல் போட்டிகளில் விளையாட மாட்டார்கள் என தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் கூறுகையில், ‘எம்.எஸ்.தோனி இன்னும் ஓய்வு பெறவில்லை. புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் தொடர்ந்து விளையாடுவார். 2026 ஐபிஎல் சீசனில் அவர் பங்கேற்பார் ’என தெரிவித்தார்.
