இளம்பிள்ளை: சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே இடங்கணசாலை தூதனூர் காட்டுவளவு பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாமலை மனைவி பெரியம்மா(75). இவர், ஆடுகளை வளர்த்து வந்தார். அருகே உள்ள இ.காட்டூர் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து மனைவி பாவாயி(70). இவர், விவசாய கூலிவேலைக்கு சென்று வந்தார். நேற்று முன்தினம் பெரியம்மா வழக்கம்போல் ஆடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டிச் சென்றார். ஆனால், வீடு திரும்பவில்லை. அதேபோல், பாவாயியும் திடீரென மாயமானார். இந்நிலையில், நேற்று காலை தூதனூர் காட்டுவளவு பகுதியில் உள்ள கல்குவாரி குட்டையில் மிதந்த பெரியம்மா, பாவாயி ஆகியோரின் சடலங்கள் மீட்கப்பட்டன. பெரியம்மா அணிந்திருந்த இரண்டு தோடு, மூக்குத்தி, கால் காப்பு. பாவாயி அணிந்திருந்த தோடு, கால் காப்பு ஆகியவை மாயமாகியிருந்தது தெரிய வந்தது. கல்குவாரியின் அருகே சாலையோரம் தங்கியிருந்த சேலம் அடுத்த கருப்பூர், வெள்ளாளபுரம் பகுதியைச் சேர்ந்த அய்யனார்(55) என்பவரை நேற்று முன்தினம் இரவு முதல் காணவில்லை எனவே, அவர் நகைக்காக மூதாட்டிகளை கொலை செய்து, உடல்களை குவாரி குட்டையில் வீசிச்சென்றாரா என போலீசார் விசாரிக்கின்றனர்.
+
Advertisement
