Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சேலம் மாவட்டம் மூதாட்டிகள் கொலை: குற்றவாளியை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீஸ்

சேலம்: சேலம் மாவட்டம் இடங்கணசாலை பகுதியில் உள்ள கல்குவாரியில் இரண்டு மூதாட்டிகள் சடலம் கடந்த 4 ஆம் தேதி காலையில் கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் மகுடஞ்சாவடி போலீசாருக்கு தகவல் அளித்ததன் பெயரில் மகுடஞ்சாவடி போலீசார் சடலங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் இறந்தது தூதனூர் பகுதியை சேர்ந்த மூதாட்டி பாவாயி மற்றும் பெரியம்மாள் என்பது தெரியவந்தது. இருவரும் ஆடு மேய்க்கும் கூலி தொழில் செய்து வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து சடலங்களை கைப்பற்றிய போலீசார் உடனடியாக சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேபரிசோதனைக்கு அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் மூதாட்டிகள் அணிந்திருந்த தங்க நகைகள் மயமானது தெரியவந்தது. அவர்கள் அணிந்திருந்த தங்க நகைகளுக்காக யாராவது கொலை செய்தார்களா என்ற சந்தேகதின் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த விசாரணை அடிப்படியில் அய்யனார் என்பவர் மீது சந்தேகம் ஏற்பட்டதால் அவரை போலீசார் தேடி வந்த சூழ்நிலையில், அவர் சங்ககிரி அருகே ஒளிந்திருப்பதாக போலீசாருக்கு நேற்று இரவு தகவல் கிடைத்தது. இன்று அதிகாலை போலீசார் அவர் மறைந்திருந்த பகுதியில் சுற்றிவழித்தனர்.

அப்போது அய்யனார் ஒரு போலீசாரை கத்தியால் குத்திவித்து தப்பிக்க முயற்சி செய்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஆய்வாளர் செந்தில்குமார் துப்பாக்கியால் சுட்டதில் அய்யனார் காலில் குண்டு பயந்தது. உடனடியாக போலீசார் அவரை மடக்கி பிடித்த போலீசார் சங்ககிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக்க அனுமதித்தார். இப்போது மேல் சிகிச்சைக்காக குற்றவாளி அய்யனாரை சேலம் அரசு மருத்துவமனைக்கு அளித்து சென்று உள்ளனர். இந்த சம்பவம் குறித்து சங்ககிரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.