சேலம்: சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகே அணைமேடு ராஜமுருகன் கோயிலில், 56 அடி உயர முருகன் சிலை அமைக்கப்பட்டது. இந்நிலையில் பிரமாண்டமாக கட்டப்பட்ட அந்த முருகன் சிலையின் முக அமைப்பு, முனியப்பன், அய்யனாரப்பன் ஆகிய கடவுள்களின் உருவத்தை ஒத்திருந்தது. முருகன் என்றாலே அழகு என்று பொருள்படுவதாக கூறி, பிரமாண்ட சிலை குறித்து சர்ச்சை எழுந்தது.
சுற்று வட்டார பகுதி மட்டும் அல்லாமல் சிலை குறித்து தகவல் தெரிந்த பலதரப்பட்ட மக்கள் சமூகவலைதளங்களில் தங்கள் கருத்துக்களை பதிவிட்டனர். பலர் எதிர்மறை கருத்துக்களால் விமர்சனம் செய்தனர். இதையடுத்து கோயில் நிர்வாகம் சார்பில் முகம் மறு வடிவமைப்பு செய்யப்பட்டு இன்று கும்பாபிஷேகம் நடந்தது. இதில் தாரமங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.


