Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அறிமுக வீரராக களமிறங்கிய சாய் சுதர்சன்

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில், இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ள தமிழகத்தை சேர்ந்த சாய் சுதர்சன் அறிமுக வீரராக நேற்று களமிறங்கினார். தமிழகத்தை சேர்ந்த சாய் சுதர்சன் (23), முதல் தர கிரிக்கெட்டில் இதுவரை, 49 இன்னிங்ஸ்களில் ஆடி 1957 ரன்களை குவித்துள்ளார்.

அவரது சராசரி ரன் குவிப்பு, 39.93. அதிகபட்ச ஸ்கோர் 213 ரன். ஐபிஎல் போட்டிகளில் குஜராத் அணிக்காக ஆடிய சாய் சுதர்சன், 15 போட்டிகளில் 759 ரன் குவித்து ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றி சாதனை படைத்தார். நெருக்கடியான சூழலில் அவரது ஆடும் திறன் அனைவரையும் கவர்ந்தது. அதனால், தவிர்க்க முடியாத வீரராக உருவெடுத்த சாய் சுதர்சன், இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் ஆடும் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதையடுத்து, நேற்று துவங்கிய இங்கிலாந்து அணியுடனான போட்டி, சாய் சுதர்சனுக்கு அறிமுக போட்டியாக அமைந்தது.