Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

சைனிக் பள்ளிகளில் சேர வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

சென்னை: நாடு முழுவதும் 33 சைனிக் பள்ளிகள் அமைந்துள்ளன. இவற்றில் 6, 9ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு ஆண்டுதோறும் தேசிய தேர்வுகள் முகமை(என்டிஏ) மூலமாக நடத்தப்பட்டு வருகிறது. 2026-27ம் கல்வியாண்டுக்கான தேசிய நுழைவுத் தேர்வு ஜனவரி மாதம் நடைபெற உள்ளது. https://exams.nta.nic.in/sainik-school-society/ என்ற இணையதளம் வழியாக அக்டோபர் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இதற்கு விண்ணப்பக் கட்டணமாக எஸ்சி/எஸ்டி பிரிவினர் ரூ.700-ம், இதர பிரிவினர் ரூ.850-ம் இணையவழியில் அக்டோபர் 31ம் தேதிக்குள் செலுத்த வேண்டும். கூடுதல் விவரங் களை www.nta.ac.in இணையதளத்தில் அறியலாம். ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் 011-40759000 என்ற தொலைபேசி மூலமாக அல்லது aissee@nta.ac.in எனும் மின்னஞ்சல் முகவரி வாயிலாக தொடர்புக் கொண்டு உரிய விளக்கம் பெறலாம் என்று என்டிஏ வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.