Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

அதானி குழுமத்துக்கு சொத்துக்கள் விற்கும் சஹாரா நிறுவனம்: உச்சநீதிமன்ற அனுமதி கோரி மனு

புதுடெல்லி: சஹாரா இந்திய கமர்ஷியல் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் தனது சொத்துக்களை அதானி குழுமத்திடம் விற்பனை செய்வதற்கு உச்சநீதிமன்றத்திடம் அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளது. சஹாரா இந்திய கமர்ஷியல் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் ஏராளமானவர்கள் முதலீடு செய்திருந்தனர். இந்நிலையில் நிறுவனம் கடந்த 2012ம் ஆண்டு முறையான அனுமதி பெறாமல் முழுமையாக மாற்றத்தக்க கடன் பத்திரங்களை விற்பனை செய்துள்ளது. இதனை தொடர்ந்து நிறுவனம் வட்டியுடன் அந்த தொகையை திரும்ப செலுத்த உத்தரவிடப்பட்டது.

2023ம் ஆண்டு சஹாரா நிறுவனர் சுப்ரதா ராய் இறந்த பின்னர் நிறுவனம் முடிவெடிக்கும் அதிகாரம் உள்ள ஒரே நபரை இழந்தது. அவரது குடும்ப உறுப்பனர்கள் நிறுவனத்தின் அன்றாட வணிக நடவடிக்கைகள் மற்றும் நிர்வாகத்தில் ஈடுபடவில்லை. இதனை தொடர்ந்து நீதிமன்றத்தின் அனுமதி பெற்று சஹாரா சொத்துக்களை விற்பனை செய்வதற்கு முடிவு செய்துள்ளது. மகாராஷ்டிராவின் ஆம்பி வேலி மற்றும் லக்னோவில் உள்ள சஹாரா சாஹர் உள்ளிட்ட பல்வேறு சொத்துக்களை அதானி பிராப்பர்டீஸ் பிரைவேட லிமிடெட் நிறுவனத்துக்கு விற்பனை செய்ய முடிவு செய்து உச்சநீதிமன்றத்தின் அனுமதி கோரி சஹாரா மனுத்தாக்கல் செய்துள்ளது.