திருவனந்தபுரம்: சபரிமலையில் 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட இளம்பெண்களை அனுமதிக்க கடந்த 2018ம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கிடையே இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் பல்வேறு அமைப்புகளின் சார்பில் அப்பீல் செய்யப்பட்டது. இந்த மனுக்களின் மீது விசாரணை நடைபெற்றபோது 2019ல் திருவிதாங்கூர் தேவசம் போர்டு சார்பில் தாக்கல் செய்த அறிக்கையில் சபரிமலையில் இளம்பெண்களை அனுமதிக்க தடை இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த் திருவனந்தபுரத்தில் நேற்று கூறுகையில், சபரிமலையில் இளம்பெண்களை அனுமதிக்கலாம் என்ற தேவசம் போர்டின் அறிக்கையில் மாற்றம் செய்வது குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்தார்.