Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

சபரிமலையில் உடனடி முன்பதிவு எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பு

திருவனந்தபுரம்: சபரிமலையில் நாளை (24ம் தேதி) வரை உடனடி முன்பதிவு எண்ணிக்கையை 5 ஆயிரமாக கட்டுப்படுத்த கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதுதொடர்பாக தேவசம் போர்டு மனுவை பரிசீலித்த உயர்நீதிமன்றம் உடனடி முன்பதிவு எண்ணிக்கையை சூழ்நிலைக்கு ஏற்ப அதிகரித்துக் கொள்ள அனுமதி வழங்கியது. இதைத் தொடர்ந்து நேற்று முதல் உடனடி முன்பதிவு எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. தற்போது 1 நிமிடத்தில் 85 பக்தர்கள் வரை 18ம் படி ஏற்ற முடிவு செய்யப்பட்டது. பாதுகாப்பு பணிக்காக கோவையைச் சேர்ந்த அதிவேக அதிரடிப்படை (ஆர்ஏஎப்) வீரர்கள் நேற்று சபரிமலை வந்தனர்.