Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

சபரிமலையில் 8 நாளில் 7 லட்சத்திற்கும் அதிகமானோர் தரிசனம்

திருவனந்தபுரம்: சபரிமலையில் இந்த மண்டல சீசனில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பக்தர்கள் கட்டுக்கடங்காமல் குவிந்ததால் உடனடி முன்பதிவு எண்ணிக்கையை 20 ஆயிரத்திலிருந்து 5 ஆயிரமாக குறைக்க கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனால் நெரிசல் குறைந்ததை தொடர்ந்து கடந்த இரு தினங்களுக்கு முன் உடனடி முன்பதிவு எண்ணிக்கை மீண்டும் உயர்த்தப்பட்டது. இதனால், கடந்த இரு நாட்களில் 1.70 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். கடந்த 8 நாட்களில் தரிசனம் செய்த பக்தர்கள் எண்ணிக்கை 7 லட்சத்தை தாண்டியுள்ளது.