Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

சபரிமலை பக்தர்களுக்கு பாதுகாப்பு வசதியை ஏற்படுத்தி தர அரசுக்கு பிரேமலதா வலியுறுத்தல்

சென்னை: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா வெளியிட்ட அறிக்கை: சபரிமலைக்கு மாலை அணிவித்து பாதயாத்திரையாகவும், வாகனங்களிலும் செல்லும் பக்தர்களுக்கு கனிமவள லாரிகள் விபத்துக்களை ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. கார்த்திகை மாதம் தொடங்கிய சில நாட்களில் வாகன விபத்துகள் அதிக இடத்தில் நடந்திருக்கின்றன. 2 மாதங்களுக்கு கனிமவள லாரிகள் செல்வதை உடனடியாக தமிழக அரசு தடை செய்ய வேண்டும். சபரிமலைக்கு சென்று வருபவர்களுக்கு போக்குவரத்து நெரிசல் இல்லாமலும், விபத்து ஏற்படாமலும் பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும்.