சென்னை: சபரிமலை சீசனை முன்னிட்டுப் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மச்சிலிப்பட்டினம் – கொல்லம் இடையே நேரடி சேவை அறிவித்துள்ளது.
செகந்திராபாத்: சபரிமலை ஐயப்பன் சீசனை முன்னிட்டுப் பக்தர்களின் கூடுதல் கூட்ட நெரிசலைக் குறைக்கும் விதமாக, தென் மத்திய ரயில்வே மச்சிலிப்பட்டினம் (Machilipatnam) மற்றும் கொல்லம் (Kollam) இடையே சிறப்பு ரயில்களை இயக்கவுள்ளது. இந்த ரயில்கள் காட்பாடி மற்றும் ஜோலார்பேட்டை வழியாக இயக்கப்படுகின்றன.
நரசப்பூர் – கொல்லம் வாராந்திரச் சிறப்பு ரயில்: சபரிமலை பக்தர்களுக்காக சேவை அறிவிப்பு!
தென் மத்திய ரயில்வே சபரிமலை சீசனை முன்னிட்டு, நரசப்பூர் (Narasapur) மற்றும் கொல்லம் (Kollam) இடையே வாராந்திரச் சிறப்பு ரயில்களை இயக்க அறிவித்துள்ளது. இந்த ரயில்கள் தமிழகத்தில் காட்பாடி மற்றும் ஜோலார்பேட்டை வழியாக இயக்கப்படுகின்றன.
சபரிமலை சிறப்பு ரயில்: சார்லபள்ளி – கொல்லம் இடையே வாராந்திர சேவை அறிவிப்பு!
தென் மத்திய ரயில்வே, சபரிமலை பக்தர்களின் பயண நெரிசலைக் குறைக்க, சார்லபள்ளி (Charlapalli) மற்றும் கொல்லம் (Kollam) இடையே வாராந்திரச் சிறப்பு ரயில்களை இயக்கவுள்ளது. இந்த ரயில்கள் தமிழகத்தில் காட்பாடி மற்றும் ஜோலார்பேட்டை வழியாக இயக்கப்படுகின்றன.
வாராந்திர சபரிமலை சிறப்பு ரயில்: காக்கிநாடா டவுன் – கோட்டயம் இடையே சேவை!
தென் மத்திய ரயில்வே, சபரிமலை சீசனுக்காக ஆந்திரப் பிரதேசம் மற்றும் கேரள மாநிலங்களை இணைக்கும் வகையில், காக்கிநாடா டவுன் (Kakinada Town) மற்றும் கோட்டயம் (Kottayam) இடையே வாராந்திரச் சிறப்பு ரயில்களை இயக்க அறிவித்துள்ளது.
சபரிமலை சிறப்பு ரயில்: நாந்தேட் – கொல்லம் இடையே வாராந்திர சேவை அறிவிப்பு!
தென் மத்திய ரயில்வே, சபரிமலை பக்தர்களின் பயண நெரிசலைக் குறைக்க, ஹுஸூர் சாஹிப் நாந்தேட் (Hazur Sahib Nanded) மற்றும் கொல்லம் (Kollam) இடையே சிறப்பு ரயில்களை இயக்கவுள்ளது. இந்த ரயில் திருவண்ணாமலை, திருச்சி, மதுரை, செங்கோட்டை வழியாகச் செல்வதால் தமிழகத்தின் பல பகுதிப் பயணிகளுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.
