திருவனந்தபுரம்: சபரிமலையில் சுற்றுச்சூழல் மாசு அடைவதை தடுக்க, பாக்கெட் ஷாம்பு, செயற்கை குங்குமம் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மண்டல, மகரவிளக்கு சீசனை ஒட்டி சபரிமலை, பம்பா, எருமேலி பகுதிகளில் பாக்கெட் ஷாம்பு, ரசாயன குங்குமம் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சபரிமலையில் பிளாஸ்டிக் பைகள், செயற்கை குங்குமத்தால் நீர் மாசு அடைவதாக கேரள உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மேலும் 'எருமேலியில் உள்ள ஆற்று ஓடைகளின் குறுக்கே வலைகள் அமைக்கப்பட வேண்டும். வேதியியல் ரீதியாக தயாரிக்கப்படும் குங்குமம் பயன்பாட்டால் சூற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது' என கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
+
Advertisement

