சபரிமலையில் துவாரபாலகர் சிலை,பீடத்திற்கான தங்கத் தகடு காணாமல்போனதன் பின்னணியில் சதி உள்ளது: கேரள தேவசம் துறை அமைச்சர் வாசவன் குற்றச்சாட்டு
கேரளா: சபரிமலையில் துவாரபாலகர் சிலை மற்றும் பீடத்திற்கான தங்கத் தகடு காணாமல்போனதன் பின்னணியில் சதி உள்ளதாக கேரள தேவசம் துறை அமைச்சர் வாசவன் பரபரப்பு குற்றச்சாட்டு வைத்துள்ளார். 4 ஆண்டுகளாக மறைத்து வைக்கப்பட்டிருந்த, தங்கத் தகடு பின்பு காணாமல்போனவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காணாமல் போன பீடங்களில் ஒன்று 6 ஆண்டுகளுக்கு பின் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அமைச்சர் குற்றச்சாட்டு வைத்தார். கொடையாளர்களில் ஒருவரான உன்னி கிருஷ்ணனின் சகோதரி வீட்டில் இருந்து பீடங்களில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதும் தெரியவந்தது.