புதுடெல்லி: வெளியுறவு துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், ‘‘சமீபத்தில் ரஷ்ய ராணுவத்தில் இந்தியர்கள் சேர்க்கப்பட்டதாக நாங்கள் செய்திகளை பார்த்தோம். இந்த விவகாரத்தில் டெல்லி மற்றும் மாஸ்கோவில் உள்ள ரஷ்ய அதிகாரிகளிடம் எடுத்துச் சென்றுள்ளோம். இந்த நடைமுறையை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் மற்றும் எங்களது நாட்டை சேர்ந்தவர்களை விடுவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளோம். தற்போது பணியாற்றும் அனைத்து இந்தியர்களையும் விடுவிக்க வேண்டும் என்று இந்தியா கோரியுள்ளது. ரஷ்ய ராணுவத்தில் சேருவதற்கான எந்தவொரு சலுகையும் நம்ப வேண்டாம். அவற்றில் இருந்து விலகி இருக்குமாறு அனைத்து இந்திய குடிமக்களையும் மீண்டும் ஒரு முறை நாங்கள் எச்சரிக்கிறோம். ஏனெனில் இது ஆபத்து நிறைந்த ஒன்றாகும்” என்றார்.
+
Advertisement