ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் வெளுத்து வாங்கிய கனமழை: வெள்ளக்காடாக காட்சியளிக்கும் குடியிருப்புகள், வணிக வளாகங்கள்
மாஸ்கோ: ரஷ்யாவில் மாஸ்கோவில் பெய்த கனமழையால் பல மெட்ரோ ரயில் நிலையங்களில் விமானநிலையம் செல்லும் எரோ எக்ஸ்பிரஸ் ரயில் சேவையும் பாதிக்கப்பட்டது. ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் வெளுத்து வாங்கிய கனமழையால் குடியிருப்புகள், வணிக வளாகங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. மாஸ்கோவில் ஒரே நாளில் பெய்த கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. மேலும் பல இடங்களில் கார்கள் வெள்ளத்தில் மூழ்கின. சுரங்கபாதைகள் மற்றும் வாகன நிறுத்தும் இடங்களில் நின்றியிருந்த கார்கள் மீது தண்ணீர் அருவிபோல் கொட்டியது. கனமழையால் பல மெட்ரோ நிலையங்களிலும், மாஸ்கோவில் செரிமோட்டியோ விமான நிலையத்திற்கு செல்லும் எரோ எக்ஸ்பிரஸ் ரயில் சேவையும் பாதிக்கப்பட்டது.