நியூயார்க்: ரஷ்யாவுடன் வணிகம் செய்யும் எந்த நாடாக இருந்தாலும் கடும் தடைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அதிபர் டிரம்ப்பிடம், ரஷ்யா மற்றும் அதிபர் விளாடிமிர் புதினுக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கத்தில் நாடாளுமன்றத்தில் நடவடிக்கைகளை நிறைவேற்ற வேண்டிய நேரம் இதுதானா என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அதிபர், அவர்கள் அதை செய்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன்.
அது பரவாயில்லை. அவர்கள் சட்டத்தை இயற்றுகிறார்கள். குடியரசு கட்சியினர் சட்டத்தை இயற்றுகிறார்கள். மிகவும் கடுமையான தடைகள். ரஷ்யாவுடன் வணிகம் செய்யும் எந்தவொரு நாட்டின் மீதும் அவர்கள் அதில் ஈரானை சேர்க்கலாம்.. நான் அதை பரிந்துரைத்தேன். எனவே ரஷ்யாவுடன் வணிகம் செய்யும் எந்தவொரு நாட்டின் மீதும் மிகவும் கடுமையான தடைகள் விதிக்கப்படும்” என்றார்.


