மாஸ்கோ: ரஷ்யாவின் கம்சத்கா பகுதியில் ஏற்பட்ட மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.8ஆக பதிவானது. கம்சத்கா பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காம்சட்கா தீபகற்பத்தின் தலைநகரான பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-காம்சாட்ஸ்கிக்கு கிழக்கே 128 கிலோமீட்டர் (80 மைல்) தொலைவில், 10 கிலோமீட்டர் (ஆறு மைல்) ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவாகியுள்ளது.
மேலும் அருகிலுள்ள கடலோரப் பகுதிகளில் ஆபத்தான அலைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்க பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. இன்று அதிகாலை 2.30 மணி சமயத்தில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், இனி கூடுதல் நிலநடுக்கங்கள் ஏற்படலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. தீபகற்பத்தின் கிழக்கு கடற்கரைக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு எச்சரிக்கை செய்யப்படுகிறது என்று அரசு சார்பாக அறிவுறுத்தப்பட்ள்ளது.