Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ரஷ்யாவின் மிக அழகான பைக் ரைடர் என்று அழைக்கப்படும் டட்யானா ஓசோலினா சாலை விபத்தில் உயிரிழப்பு

ரஷ்யா: ரஷ்யாவின் மிக அழகான பைக் ரைடர் என்று அழைக்கப்படும் டட்யானா ஓசோலினா(38) துருக்கியில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். டட்யானா ஓஸோலினா தனது சிவப்பு BMW S1000RR பைக்கை ஓட்டிச்சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த பைக் டிரக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே டட்யான ஓசோலினா உயிரிழந்தார்.

சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலமான டாட்டியானா ஓசோலினா இன்ஸ்டாகிராமில் 10 லட்சமும், யூடியூப்பில் 20 லட்சம் பின்தொடர்பவர்களும் கொண்டுள்ளார். டாட்டியானா உலகம் முழுவதும் சாகச பைக் ரைடிங் செய்து, அது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிர்ந்து வருவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

அவரது அழகு காரணமாக அவரது ரசிகர்கள் ரஷ்யாவின் மிக அழகான பைக்கர் என்று அழைக்கிறார்கள். இவருக்கு 13 வயதில் மகன் உள்ளார். டாட்டியானா தனது அழகு மற்றும் பைக் ரைடிங்கிற்காக உலகம் முழுவதும் ரசிகர்களைக் கொண்டுள்ளார். 38 வயதான டாட்டியானா துருக்கியின் மிலாஸ் பகுதியில் தனது சிவப்பு BMW S1000RR பைக்கை ஓட்டிச்சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த டாட்டியானா எதிரே வந்த லாரி மீது பலமாக மோதியுள்ளார். இந்த விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அவருக்குப் பின்னால் அமர்ந்திருந்த துருக்கிய பைக்கர் பலத்த காயமடைந்தார். ஓசோலினா பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, ​​மற்றொரு ரைடிங் குழுவினர் திடீரென அவரை தடுத்து நிறுத்தியபோது பிரேக் போட்டதில் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த லாரி மீது மோதியதாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த விபத்து குறித்து உள்ளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.