ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தியதை அடுத்து அமெரிக்காவிடம் வாங்குவது அதிகரிப்பு!!
வாஷிங்டன்: ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தியதை அடுத்து அமெரிக்காவிடம் வாங்குவது அதிகரித்துள்ளது. நவம்பரில் சராசரியாக நாளொன்றுக்கு 4.5 லட்சம் பீப்பாய்கள் வரை அமெரிக்காவிடம் கச்சா எண்ணெய் வாங்க ஒப்பந்தமிடப்பட்டது. 2022 ல் நாளொன்றுக்கு 3 லட்சம் பீப்பாயாக இருந்த அமெரிக்க கச்சா எண்ணெய் இறக்குமதி 1.5 லட்சம் பீப்பாய்களுக்கு மேல் உயர்ந்துள்ளது. அமெரிக்காவிலிருந்து இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய் அளவு 5.25 லட்சம் பீப்பாய்களாக அதிகரித்துள்ளது. உலக எண்ணெய் வர்த்தகத்தை ஆய்வு செய்யும் நிறுவனம், இந்தியாவுக்கு அமெரிக்க ஏற்றுமதி அதிகரித்துள்ளது பற்றி தகவல் தெரிவித்துள்ளது.
