சுகோய் 57 போர் விமானத்தை இந்தியாவிலேயே தயாரிக்க தேவையான தொழில்நுட்பங்களை வழங்க தயார்: ரஷ்யா அறிவிப்பு
ரஷ்யா : நேட்டோ நாடுகளின் போர் விமானங்களுக்கு சவால் விடும் அளவிற்கு தயாரிக்கப்பட்ட சுகோய் 57 ரக விமானத்தின் தொழில்நுட்பத்தை இந்தியாவுக்கு வழங்க ரஷ்யா முன்வந்துள்ளது சர்வதேச அளவில் பேசுபொருளாகி உள்ளது. 5ம் தலைமுறை சுகோய் 57 ரக போர் விமானத்தை இந்தியாவிலேயே தயாரிக்க தேவையான அனைத்து தொழில்நுட்பங்களையும் வழங்க தயாராக இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இந்தியா, ரஷ்யா இடையிலான உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷ்ய அதிபர் புதின் அடுத்த மாதம் இந்தியாவிற்கு வருகை தர உள்ளார்.
இந்த நிலையில் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட சுகோய் 57 ரக போர் விமானங்களை வழங்கவும் படிப்படியாக போர் விமானத்தை இந்தியாவிலேயே தயாரிக்க தேவையான தொழில்நுட்பங்களை வழங்கவும் தயாராக இருப்பதாக ரஷ்ய தரப்பில் தயாரிக்கப்பட்டுள்ளது. துபாய் விமான கண்காட்சியில் பேசிய ரஷ்ய ஆயுத ஏற்றுமதி நிறுவன தலைமை அதிகாரி அனைத்து உதிரி பாகங்களையும் இந்தியாவிலேயே தயாரிக்கும் வகையில் 100 சதவீதம் தொழில்நுட்ப பரிமாற்றம் செய்யவும் இந்தியாவுக்கு தேவையான அனைத்து உதவிகளை செய்யவும் தயாராக இருப்பதாக கோரினார்.
சுகோய் 57 ரக போர் விமானங்கள் வான் தரை மற்றும் கடல் இலக்குகளை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டவை ஃஎப் 22 உள்ளிட்ட நேட்டோ நாடுகளின் 5ம் தலைமுறை போர் விமானங்களுக்கு சவால் விடும் வகையில் தயாரிக்கப்பட்ட சுகோய் 57 ரக போர் விமானம் ஒளியைவிட வேகமாக பயணிக்கக்கூடியவை. இதனால் இந்த போர் விமானம் எந்த ரேடார்களிலும் சிக்காது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அதே போல் இதில் பயன்படுத்தப்பட்டுள்ள செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் துல்லியமான தாக்குதலுக்கும், அச்சுறுத்தலை துல்லியமாக கண்டறியவும் உதவுகிறது. இத்தகைய அதிநவீன போர் விமானத்தின் தொழில்நுட்பத்தை ரஷ்யா இந்தியாவிற்கு வழங்க முன்வந்திருப்பது உலக நாடுகள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.


