Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் ரூ.104.24 கோடியில் கட்டப்பட்ட புதிய கட்டிடங்கள் திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் ரூ.104.24 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். திருநெல்வேலி மாவட்டம் - நாங்குநேரி ஒன்றியத்தில் ரூ.3.95 கோடி செலவிலும், திருச்சிராப்பள்ளி மாவட்டம் - தாத்தையங்கார்பேட்டை ஒன்றியத்தில் ரூ.3.68 கோடி செலவிலும் கட்டப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டிடங்கள், மதுரை மாவட்டம் - கொட்டாம்பட்டியில் ரூ.4.90 கோடி கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் பயிலும் மாணவ,

மாணவியர்களின் கல்வி மேம்பாட்டிற்காக 19 மாவட்டங்களில் ரூ.20.34 கோடி கட்டப்பட்டுள்ள 66 புதிய பள்ளிக் கட்டிடங்கள், ஊரகப் பகுதிகளில் வாழும் மக்கள் மற்றும் மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்திட அரியலூர் மாவட்டம் - உட்கோட்டை, தர்மபுரி மாவட்டம் - மாதேமங்கலம், வேலூர் மாவட்டம் - வளத்தூர், கடலூர் மாவட்டம் - அன்னவல்லி ஆகிய இடங்களில் ரூ.88 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள 4 புதிய நூலகக் கட்டிடங்கள், ஏழை மக்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக 11 மாவட்டங்களில் ரூ.5.28 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 49 பொது விநியோகக் கடைகள்,

ஊரகப் பகுதிகளில் வாழும் மக்களின் சுகாதாரத்தை மேம்படுத்தும் விதமாக 13 மாவட்டங்களில் ரூ.18.75 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 26 ஆரம்ப சுகாதார நிலையக் கட்டிடங்கள், ஊரகப் பகுதிகளில் விளையும் விளைபொருட்களை சேமித்து எளிமையாக சந்தைப்படுத்திட 11 மாவட்டங்களில் ரூ.3.5 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 25 உணவு தானிய சேமிப்பு கிடங்குகள், ஊராட்சி மன்ற செயல்பாட்டினை மேம்படுத்திட 12 மாவட்டங்களில் ரூ.13.27 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 45 ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டிடங்கள்,

ஊராட்சி மன்றம் மற்றும் கிராம நிர்வாக அலுவலகம் இரண்டினையும் ஒருங்கிணைத்து ஓரிடத்தில் மக்கள் அரசு பயன்களை பெற்றிட 6 மாவட்டங்களில் ரூ.6.69 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 16 கிராம செயலகக் கட்டிடங்கள், சிறுகுழந்தைகள் நலம் பேணிட 19 மாவட்டங்களில் ரூ.12,69 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 84 புதிய அங்கன்வாடி மையக் கட்டிடங்கள்,

கிருஷ்ணகிரி மாவட்டம் - பெருகோபனப் பள்ளி மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் - அயக்கோடு ஆகிய இடங்களில் ஆறுகளின் குறுக்கே ரூ.6.95 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இரண்டு பாலங்கள் என மொத்தம் ரூ.104.24 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் பெரியசாமி, காந்தி கலந்து கொண்டனர்.