பாஞ்சிம்: கோவாவில் ஃபிடே உலகக் கோப்பை செஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த 2வது சுற்றின் முதல் போட்டி ஒன்றில், இந்திய கிராண்ட் மாஸ்டர் விதித் குஜராத்தி உடன், அர்ஜென்டினாவின் 12 வயது இளம் வீரர் ஒரோ ஃபாஸ்டினோ மோதினார். பெர்லின் டிபென்ஸ் முறையில் ஆடிய ஃபாஸ்டினோ அற்புதமாக காய்களை நகர்த்தி விதித்தை திணறடித்தார். கடைசியில் வேறு வழியின்றி டிரா செய்ய விதித் ஒப்புக் கொண்டார். கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி பிறந்த அர்ஜென்டினா நாட்டை சேர்ந்த ஃபாஸ்டினோ, ‘செஸ் உலகின் மெஸ்ஸி’ என்று அழைக்கப்படுகிறார்.
+
Advertisement
