ஆர்.டி.இ. சட்டத்தின் கீழ் 25% இடஒதுக்கீடு வழக்கு.. தனியார் பள்ளிகளுக்கு காலக்கெடு நீட்டிப்பு: ஐகோர்ட் உத்தரவு!
சென்னை: ஆர்.டி.இ. சட்டத்தின் கீழ் 25% இடஒதுக்கீட்டில் சேர்க்கப்பட்ட மாணவர்களின் விவரங்களை சமர்ப்பிக்க தனியார் பள்ளிகளுக்கு விதிக்கப்பட்ட காலக்கெடுவை அக்.31 வரை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 25% ஒதுக்கீட்டில் சேர்க்கப்பட்ட மாணவர்கள் பட்டியலை சமர்ப்பிக்கக் கோரிய வழக்கு முடித்து வைக்கப்பட்டது. தனியார் பள்ளிகள் இயக்குநர் பிறப்பித்த சுற்றறிக்கையை எதிர்த்து தனியார் பள்ளிகள் முன்னேற்ற சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. புதிதாக எந்த மாணவர் சேர்க்கையும் மேற்கொள்ளக் கூடாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.