தஞ்சாவூர்: தஞ்சாவூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: வாக்காளர் சிறப்பு தீவிர திருத்ததில் ஜனநாயக கடமையை உணர்வுப்பூர்வமாக அதிமுக செய்தால் நல்லது. அதற்கு நேர்மறையான கருத்துக்களை கூறுவது தவறானது. அதிமுக ஒரு ஜனநாயக வடிவம். திமுக இருப்பது எவ்வளவு நல்லதோ அவ்வளவு நல்லது ஜனநாயக கட்சிகள் இருப்பது. அந்த வடிவில் அதிமுகவை பார்க்கிறோம்.
ஆனால், எடப்பாடியின் குரல் ஆர்எஸ்எஸ் குரலாக மாறி வருவது அதிர்ச்சியாக உள்ளது. இது தமிழுக்கும், தமிழகத்துக்கும் ஏற்புடையது அல்ல. வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான கருத்தில் தமிழக முதல்வருக்கு உறுதுணையாக இருப்போம். முதல்வர் ஸ்டாலின் துவக்கியுள்ள போர் தமிழக உரிமைக்கான போர் அல்ல. பிற மாநிலங்களின் உரிமைக்கான போர். இவ்வாறு அவர் கூறினார்.

