Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

ரூ.4,000 கோடி பத்திரங்கள் வரும் 25ம் தேதி ஏலம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசு மொத்தம் ரூ.4000 கோடி மதிப்பில் 9 ஆண்டுகால பிணையப் பத்திரங்கள் ரூ.1000 கோடி, 30 ஆண்டுகால பிணையப் பத்திரங்கள் ரூ.1000 கோடி, தமிழ்நாடு அரசின் 7.16 சதவீத பிணையப் பத்திரங்கள் 2035 மறுவெளியீடு ரூ.1000 கோடி மற்றும் தமிழ்நாடு அரசின் 7.20 சதவீத பிணையப் பத்திரங்கள் 2036 மறுவெளியீடு ரூ.1000 கோடி ஏலத்தின் மூலம் விற்பனை செய்யவிருப்பதாக அறிவித்துள்ளது. இந்த ஏலம் இந்திய ரிசர்வ் வங்கியால், மும்பையில் உள்ள அதன் மும்பை கோட்டை அலுவலகத்தில் வரும் 25ம் தேதி நடத்தப்படும். போட்டி ஏலக்கேட்புகள் காலை 10.30 மணியிலிருந்து 11.30 மணிக்குள்ளாகவும், போட்டியற்ற ஏலக் கேட்புகள் காலை 10.30 மணியிலிருந்து 11 மணிக்குள்ளாகவும் இந்திய ரிசர்வ் வங்கியின் மின்னணு படிவத்தில் வரும் 25ம் தேதி சமர்ப்பிக்கப்பட வேண்டும்.