சென்னை: தேனாம்பேட்டை பகுதியை சேர்ந்த ராணி (21, பெயர் மாற்றப்பட்டுள்து). கல்லூரி மாணவியான இவர், தினசரி கல்லூரிக்கு செல்லும் போது, அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்பவர் பின்தொடர்ந்து லவ் டார்ச்சர் செய்துள்ளார். ராணி இதனை பலமுறை கண்டித்தும் விக்னேஷ் தொந்தரவு ெகாடுத்து வந்துள்ளார். நேற்று முன்தினம் ராணி கல்லூரிக்கு சென்றபோது, மதுபோதையில் பின் தொடர்ந்த விக்னேஷ், திடீரென ராணியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துள்ளார்.
அதிர்ச்சியடைந்த ராணி இதுபற்றி தாயிடம் கூறி அழுதார். ரவுடியான விக்னேஷ் மீது பல்வேறு வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தனது மகளுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படும் என்பதால், மகளுடன் தேனாம்பேட்டை காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார். புகாரின்படி போலீசார், வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விக்னேஷை கைது செய்தனர்.