சென்னை: ரவுடி சீர்காழி சத்யா மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்த உத்தரவை ஐகோர்ட் திரும்பப் பெற்றது. சீர்காழி சத்யாவை உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. பாஜக நிர்வாகி சுதாகர் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ள வந்த சத்யா கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார். பல்வேறு நிபந்தனைகளுடன் சத்யா மீதான குண்டர் சட்டத்தை உயர்நீதிமன்றம் ரத்து செய்திருந்தது.
Advertisement


