லிஸ்பன்: போர்ச்சுகலை சேர்ந்த உலகப் புகழ் பெற்ற கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ (40), உலகின் முதல் பில்லியனர் கால்பந்து வீரராக உருவெடுத்துள்ளார். சவுதி அரேபியாவின் அல் நஸர் கால்பந்து கிளப் அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற ரொனால்டோ அதற்காக, சம்பளம் மற்றும் போனசாக மட்டும், ஆண்டுக்கு ரூ.1800 கோடி பெற்றார். பல ஆண்டுகளாக முன்னணி நிறுவனங்களிடம் பெற்ற ஒப்பந்தங்கள் மூலம், ரொனால்டோ சொத்து மதிப்பு 1.4 பில்லியன் டாலராக (ரூ.12,500 கோடி) உயர்ந்துள்ளது.
+
Advertisement