கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அருகே சாலையோரம் ஜீப் கவிழுந்த விபத்தில் காவல் ஆய்வாளர் உள்ளிட்ட மூன்று பேர் படுகாயம் அடைந்தன. கள்ளக்குறிச்சி மாவட்டம் எஸ்.பி அலுவலகத்தில் ஆய்வாளராக பணி புரிந்து வருபவர் இளவரசன். இன்று விழுப்புரத்தில் நடைபெற்ற காவல் துறை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஜீபில் சென்றுள்ளார். பின்னர் அங்க நடைபெற்ற கூட்டத்தை முடித்துவிட்டு மீண்டும் விழுப்புரத்தில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு வந்தபோது, ஜீபை தலைமை காவலர் சீதாராமன் என்பவர் ஓட்டியுள்ளார். ஜீபை உளுந்தூர்பேட்டை அடுத்த சேந்தமங்கலம் குறுக்கு ரோடு அருகே சென்று கொண்டு இருந்த போது திடீர் என நிலை தடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழுந்து விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் ஆய்வாளர் இளவரசன், தலைமை காவலர் சீதாராமன் மற்றும் அவருடன் சென்ற காவலர் இளையராஜா உள்ளிட்ட மூன்று பேரும் படுகாயம் அடைந்தனர். ஜீப் முழுவதும் நொறுங்கி சேதம் அடைந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு இருந்தவர்கள் ஓடி சென்று ஆய்வாளர் இளவரசன் மற்றும் போலீசாரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.