சென்னை: தமிழ்நாட்டில் ரோடு ஷோவை ஒழுங்குபடுத்துவதற்கான வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்துக் கட்சி கூட்டத்தில் தமிழ்நாடு அரசு வழங்கியது. அதில்; கூட்டத்தை முறைப்படுத்துதல், அடிப்படை வசதிகளை உறுதிசெய்வதை தன்னார்வலர்கள் மேற்கொள்ள வேண்டும். 100 நபர்களுக்கு ஒருவர் என்ற விகிதத்தில் கட்சி, தன்னார்வலர்களை ஈடுபடுத்த வேண்டும். குடிநீர், சுகாதாரம், உணவு, நடமாடும் கழிவறை போன்ற அடிப்படை வசதிகள் தொடர்பாக திட்டம் வகுத்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
+
Advertisement
