அரசியல் கட்சிகள் ரோடு ஷோ நடத்துவதற்கான வழிகாட்டு நெறி முறைகள் வகுப்பது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
சென்னை: அரசியல் கட்சிகள் ரோடு ஷோ நடத்துவதற்கான வழிகாட்டு நெறி முறைகள் வகுப்பது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் கரூர் சம்பவத்தைத் தொடர்ந்து என்ன மாதிரியான வழிகாட்டுதல்களை பின்பற்றலாம் என ஆலோசனை நடைபெற்று வருகிறது. நெறிமுறைகள் தயாரிக்கப்பட்டு விரைவில் இறுதிசெய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
