Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ரோடு ஷோ முடக்கத்தில் தாமரையின் உள்ளடி இருப்பதை பற்றி சொல்கிறார் wiki யானந்தா

‘‘குட்டி பிரான்ஸ் எனப்படும் யூனியனில் போலி மருந்து விவகாரத்தால் புல்லட்சாமி அரசு ஆடிப்போய் இருக்காமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.

‘‘மருத்துவத்துக்கு பெயர் போன புதுச்சேரியில் ேபாலி மாத்திரைகளை சமீபத்தில் காக்கிகள் கண்டுபிடித்தார்களாம்.. ஏற்கனவே தரமற்ற மருந்துகளை அரசு ஆஸ்பத்திரியில ஏழைகளுக்கு சப்ளை செய்த விவகாரத்தில் மாஜிக்கள் கூண்டோடு சிக்க, அடுத்தடுத்து ஒவ்வொருவராக வெளியே வந்துவிட்டார்களாம்.. இது ஒருபுறமிருக்க, போலி மாத்திரை தயாரித்தவர்களை கைது செய்யும் நடவடிக்கை தாமதமாக, காக்கிகளின் தொடர் நெருக்கடியால் திடுக் தகவல்கள் கிடைத்ததாம்.. அதாவது அனுமதி பெறாமலே இயங்கிய நிறுவனமானது போலி மருந்துகளுக்காக சுமார் 100 கோடிக்குமேல் ஜிஎஸ்டி செலுத்தியது அம்பலமாக புல்லட்சாமி அரசு ஆடிப்போனதாம்.. போலிகளிடம் ஜிஎஸ்டி வருவாயை எந்த அடிப்படையில் ஒன்றிய, மாநில அரசுகள் வசூலித்தன என்ற கேள்வியை எதிர்க்கட்சிகள் கிடுக்கிப்பிடியாக்கி உடனே வெள்ளை அறிக்கை வெளியிடணும் என கொந்தளித்தார்களாம்.. தரமான நிறுவனங்களின் விண்ணப்பங்களை நிராகரித்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை பாயணும் என்ற கோரிக்கை வலுக்க புதுச்சேரியை போலிச்சேரி என அழைக்கும் ஓசை ஆங்காங்கே கேட்கிறதாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘தொகுதியை கைப்பற்றும் போட்டியில் மாஜிக்கள் ரெண்டு பேர் போட்டிப்போட்டு அரசியல் செய்வதில் இலைக்கட்சி சிட்டிங் எம்எல்ஏ செய்வதறியாது திண்டாடுறாராமே..’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘லிங்கசாமியின் பெயர் கொண்ட நதி மாவட்டத்தின் தலைநகர தொகுதியில் சிட்டிங் சமஉ ஆக இருக்கும் முருக கடவுளின் பெயரைக் கொண்டவரும், மாஜி அமைச்சரான மீசைக்காரரும் ரொம்ப காலமாகவே எதிரெதிர் துருவங்களாக அரசியல் செய்து வர்றாங்க.. தலைநகர தொகுதியை மீண்டும் கைப்பற்றுவதில் இருவரிடையே கடுமையான போட்டி ஏற்பட்டிருக்கு.. இருவர் தரப்பும் நேரடியாக மோதிக் ெகாள்ளாதது மட்டும்தான் பாக்கியாம்.. அந்தளவிற்கு எதிரெதிர் அரசியல் உச்சத்தில் உள்ளதாம்.. இதுபோதாது என்கிற குறைக்கு, இலைத்தரப்பில் இருந்து குக்கர் தரப்புக்கு சென்று, பின்னர் அங்கிருந்து மீண்டும் இலைத்தரப்புக்கு தாவியுள்ள மாஜி எம்எல்ஏ, தன் பங்குக்கு தனி அரசியலை துவக்கியுள்ளாராம்.. இவர் தரப்பில் இருந்து சிட்டிங்கிற்கு எதிராக தினந்தோறும் புகார்கள் தலைமைக்கு பறக்கிறதாம்.. குறிப்பாக, மாவட்டத்தில் கூட்டமே நடத்துவதில்லை. கட்சி, தொண்டர்கள் இருக்கும் இடமே தெரியவில்லை. சிட்டிங் மட்டுமே இருக்கிறார் என்ற வகையில் புகார் நீள்கிறதாம்.. அதேநேரம் மாஜி மீண்டும் இலை பக்கம் வந்ததை சிட்டிங் விரும்பவில்லையாம்.. இதனால் சிட்டிங்கிற்கு எதிராக ரெண்டு மாஜிக்களும் போட்டி போட்டுக் கொண்டு அரசியல் செய்து வருகிறார்களாம்.. இதனால், சிட்டிங் செய்வதறியாது திகைத்து வருகிறாராம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘யூனியன் ரோடு ஷோவில் தாமரையின் உள்ளடியால் நடிகருக்காக முழு பிடியும் காக்கிகளிடம் போயிட்டாமே..’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘விஜய நடிகரானவரின் கட்சியால் நடந்த கரூர் கதறல்கள் நாட்டையே உலுக்க, இரு மாதமாக சைலன்ட் மூடில் இருந்தார்களாம்.. மீண்டும் பொது இடத்தில் நிகழ்ச்சி நடத்த கேட்டபோது மாநில காக்கிகளோ நீதிமன்றத்தை குறிப்பிட்டு நிராகரிக்க அண்டை யூனியனான புதுச்சேரி பக்கம் பார்வையை திருப்பியதாம்.. புல்லட்சாமி ஆதரவோடு ரோடு ஷோவை நடத்திடலாம் என திட்டமிட்டு புஸ்ஸியும், அர்ஜூனும் முகாமிட்டு அனுமதிக்காக கிடந்தார்களாம்.. காக்கி உயர் தரப்பை இரண்டு, மூன்று முறையல்ல, அதையும் கடந்ததோடு புல்லட் சாமியையும் அடுத்தடுத்து நேரில் சந்தித்து பேசினார்களாம்.. ஆனால் கடைசியில் ரோடு ஷோவுக்கு தடை வர அப்செட் ஆனார்களாம்.. பொதுக்கூட்டத்தை வேணும்ண்ணா மைதானத்தில் நடத்திக்கலாம்.. என்ற கருத்தை காக்கிகள் கூற குறிப்பிட்ட தேதியில நிகழ்ச்சியை நடத்த முடியலையே என்ற ஏமாற்றத்தில் விஜயமான நிர்வாகிகள் புலம்பினார்களாம்.. அத்தோடு யூனியனில் சில மைதானங்களை உடனே சென்று விசிட் அடித்தார்களாம்.. இத்தகவல் உடனே கசிய உள்ளூர்வாசிகளிடம் எதிர்ப்பு கிளம்பி இருக்காம்.. இதனால் நடிகருக்கான அனுமதி தொடர்பான முழு பிடியும் புல்லட்சாமியை கடந்து காக்கிகளிடமே வந்துள்ளதாம்.. பல ஆயிரம் கூடுகிற அளவில் இங்குள்ள எந்த மைதானமும் அடங்காது... சாலைகளும் தாங்காது... என கூக்குரல் எழுந்துள்ளதாம்.. விஜயமானவருக்கு சாதகமாக எதுவும் நடக்கக் கூடாது என அங்குள்ள தாமரையும் கருதுகிறதாம்.. நடிகரின் நட்பு எப்படியாவது முறிந்திடாதா என்ற எதிர்பார்ப்பு தாமரையிடம் நிலவுகிறதாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘பசையுள்ள பார்ட்டியை கண்டுபிடிக்க கமிஷனுக்கு ஆட்களை நியமித்திருக்காராமே இலைக்கட்சி தலைவர்..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.

‘‘மலராத கட்சியுடன் கூட்டணி சேர்ந்த இலைக்கட்சி தலைவர், பிரமாண்டமான கூட்டணியை அமைப்பேன் என உறுதியுடன் சொன்னாரு.. டிசம்பரில் அப்படி ஒரு கூட்டணியை யாரும் இதுவரை கண்டிருக்க மாட்டீர்கள் என கட்சிக்காரர்களை உசுப்பேத்திய விவகாரம் நாடறியுமாம்.. குறிப்பாக நடிகர் கட்சியுடன் பேசிவிட்டேன், நம்முடன் தான் கூட்டணி வைப்பார் என கூறியே கட்சிக்காரர்களை நம்ப வைத்தாராம்.. குறிப்பாக பிள்ளையார்சுழி போட்டாச்சுன்னு இலைக்கட்சி கூட்டத்தில் தனது கட்சிக்காரர்களை வைத்தே கொடியை ஆட்டச்செய்ததும் அவர் தானாம்.. ஆனால் ேகாபிகோட்டையனால் இலைக்கட்சி தலைவரின் கனவு எல்லாமே அழிஞ்சிப்போச்சாம்.. கட்சியில் இருந்து நீக்கப்பட்ட கோட்டையன், மலராத கட்சியோடு செல்வார் அல்லது ஆளுங்கட்சியுடன் ஒட்டிக்கொள்வார் என நினைத்தாராம்.. ஆனால் கோட்டையனோ நடிகர் கட்சியில் இணைந்ததால் இலைக்கட்சி தலைவர் ரொம்பவே ஷாக்காயிட்டாராம்.. இதனால் இவரை நம்பிய இலைக்கட்சி ரெண்டாங்கட்ட மற்றும் மா.செ.க்களும் பெரும் சோகத்திற்கு ஆளாகிட்டாங்களாம்.. அதே நேரத்தில் அவரது நெருங்கிய நண்பரான மாங்கனி நிழலானவர், வேட்பாளர்களை தேர்வு செய்வதில் ரொம்பவே தீவிரமாக இருக்காராம்.. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு சிலரை நியமிச்சிருக்காராம்.. அவர்கள் 25 கோடி செலவு செய்யும் வகையிலான பசை உள்ளவர்களா என்பதை கண்டறிந்து, நிழலானவரிடம் கொண்டு வந்து நிறுத்துவாங்களாம்.. இவ்வாறு செயல்படுபவர்களுக்கும் பெரும்ெதாகை கமிஷன் உண்டென்று இலைக் கட்சிக்காரங்க சொல்றாங்க.. இந்த விவகாரமெல்லாம் நிழலானவரின் காட்டுப்பங்களாவில் இலைக்கட்சி தலைவரின் ஆசியோடத்தான் நடக்குதாம்.. அடுத்த ஆட்சி நம்முடையது தான் என அவர்களிடம் நிழலானவரும் உசுப்பேத்துறாராம்.. இதெல்லாம் அந்தந்த மா.செ.க்களுக்கு தெரியாமலேயே நடக்குதாம்.. இதனால அவர்கள் கொந்தளிப்பில் இருக்காங்களாம்.. அதே நேரத்தில் பழம் தின்னு கொட்டைப்போட்ட இலைக்கட்சிக்காரங்களோ நைசாகவே நழுவுறாங்களாம்.. கூட்டணி விவகாரத்தில் கழுதை தேய்ந்து கட்டெரும்பான கதையா இருக்குது.. மலராத கட்சியையும், கதர்சட்டை சைக்கிள்கடைக்காரரையும் வைத்து ஜெயிக்க முடியாது.. இந்நேரத்தில் சிக்கிக்கொண்டால் தலையில் துண்டுபோடும் நிலை தான் ஏற்படுமுன்னு தெரிஞ்சிக்கிட்டு சீட் வேண்டாமுன்னு சொல்லிக்கிட்டு ஓட்டம் பிடிக்கிறாங்களாம் ரத்தத்தின் ரத்தங்கள்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.