சாலைகள், தெருக்களின் ஜாதிப் பெயர்களை நீக்குவது தொடர்பான அரசாணைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீட்டிப்பு
மதுரை: சாலைகள், தெருக்களின் ஜாதிப் பெயர்களை நீக்குவது தொடர்பான அரசாணைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டித்து ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஜாதிப் பெயர்களை நீக்க அரசு பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க கோரி பரமசிவம் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். ஜாதிப் பெயர்களை நீக்குவது தொடர்பாக வகுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை தாக்கல் செய்ய அரசு அவகாசம் கோரியது. பதில் மனு தாக்கல் செய்ய அரசுக்கு அவகாசம் வழங்கி வழக்கு விசாரணையை டிச.10க்கு ஐகோர்ட் கிளை ஒத்திவைத்தது.


