சென்னை: வடகிழக்கு பருவமழையை ஒட்டி 3 மாதங்களுக்கு சென்னையில் சாலை வெட்டும் பணிக்கு மாநகராட்சி தடை விதித்துள்ளது. பருவமழையை ஒட்டி சென்னை மாநகராட்சி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குடிநீர் வடிகால் வாரியம், மின்சார வாரியம் உள்ளிட்ட எந்த நிறுவனங்களும் சாலையில் பள்ளம் தோண்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. அவசரகால நடவடிக்கைக்காக சாலையில் பள்ளம் தோண்ட மாநகராட்சி அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும். அனுமதியின்றி சாலையில் பள்ளம் தோண்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளது.
+
Advertisement