Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சாலை விபத்துகளில் தமிழ்நாட்டுக்கு முதல் இடம்: பாதை மாறும் பயணத்தால் பறிபோகும் உயிர்கள்

டெல்லி: இந்தியாவிலேயே சாலை விபத்துகள் அதிகம் நிகழும் மாநிலமாக தமிழகம் உள்ளது. சாலை விபத்துகளால் அதிகம் பேர் உயிரிழக்கும் மாநிலங்களில் 2ம் இடத்தில் தமிழ்நாடு உள்ளது. 2023ம் ஆண்டு ஒன்றிய அரசு வெளியிட்ட புள்ளி விவரப்படி இந்தியாவிலேயே அதிக சாலை விபத்து நடைபெறக்கூடிய மாநிலமாக தமிழகம் உள்ளது. 2023ம் ஆண்டில் தமிழ்நாட்டில் மட்டும் 67,213 சாலை விபத்துகள் நடந்துள்ளன. சாலை விபத்துகளில் அதிக உயிரிழப்பு நடக்கும் மாநிலங்களில் 2ம் இடத்தில் உள்ளது. 2023ல் 18,347 பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளனர். இதற்கு முந்தைய 5 ஆண்டுகளிலும் இந்திய மாநிலங்களிலேயே தமிழ்நாட்டில் தான் அதிக எண்ணிக்கையிலான சாலை விபத்துகள் பதிவாகியுள்ளன. 2024ல் இந்த எண்ணிக்கை சற்றே குறைந்துள்ளது.

கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் நிகழ்ந்த சாலை விபத்துகள் 67,183 சாலை விபத்தில் உயிரிழந்தவர்கள் 18,074. ஒருவர் கொலை செய்யப்பட்டாலோ அல்லது குண்டு வெடிப்பில் ஒருவர் உயிரிழந்து விட்டாலோ பெரிய செய்தி ஆகிறது. ஆனால் சாலை விபத்துகளில் எண்ணற்ற உயிர்கள் பறிபோகும் அவலத்தை பற்றி பெரிதாக யாரும் கவலை கொள்வதில்லை. தலைநகர் சென்னையில் 3 முக்கிய சாலைகளில் அதிக விபத்துகள் நிகழ்கின்றன. முதன்மையாக மூலக்கதை முதல் புழல் வரை செல்லும் சாலையில் கடந்த ஆண்டு மற்றும் 132 விபத்துக்கள் 19 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. 2வது கிழக்கு கடற்கரை சாலையில் ஈஞ்சம்பாக்கம் முதல் கொட்டிவாக்கம் வரை உள்ள பகுதியில் 85 விபத்துகளும் 19 பேர் உயிரிழந்துள்ளனர். 3வது இடத்தில ஜிஎஸ்டி சாலையில் கத்திப்பாரா முதல் சென்னை விமானம் நிலையம் வரை உள்ள பகுதியில் கடந்த ஆண்டு 14 விபத்துகளில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதிக உயிரிழப்புகள் நிகழும் நெடுஞ்சாலைகளாக தேனி மாவட்டத்தில் உள்ள குமுளி நெடுஞ்சாலை உள்ளது. இதில் கடந்த ஆண்டு நடந்த 331 விபத்துகளில் 132 பேர் உயிரிழந்துள்ளனர். புதுக்கோட்டையில் உள்ள மாத்தூர் சபரியாபுரம் சாலையில் 266 விபத்துகளில் 95 பேர் உயிரிழந்துள்ளனர். மதுரையில் உள்ள சுங்கச்சாவடி முதல் ஆண்டிபட்டி கணவாய் சாலை வரி 297விபத்துகளில் 77 பேர் உயிரிழந்தனர். கோயம்பத்தூரில் உள்ள வாளையார் நெடுஞ்சாலையில் 331 விபத்துகளில் 49 பேர் உயிரிழந்துள்ளனர். அதிவேகமாக வாகனங்களை ஓட்டுவது மொபைல் போன் பயன்படுத்தி கொண்டு வாகனம் ஓட்டுவது மதுபானம் அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டுவது,

ஹெல்மட் அணியாமல் வாகனங்களை ஓட்டுவது போன்ற பல்வேறு காரணங்களால் சாலை விபத்துகளும் உயிரிழப்புகளும் அதிகரிக்கின்றன. அதுமட்டுமல்லாமல் நெடுஞ்சாலை துறை சார்பில் எடுக்கப்பட்ட ஆய்வில் வாகனங்கள் ஒரே நேர்கோட்டில் செல்லாமல் மற்றவர்கள் பாதையில் குறுக்கிட்டு விபத்து ஏற்படுவதும் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தொலை தூர சாலைகளில் கனரக வாகனங்கள் செல்வதற்கென்று ஒரு பாதை இருக்கும் கார்கள் செல்வதற்கென்று ஒரு பாதை இருக்கும். இரு சக்கர வாகனம் செல்வதற்கென்று ஒரு பாதை இருக்கும் ஆனால் பலர் திடீரென்று பாதை மாற்றுவதால் அதிக விபத்துகள் ஏற்படுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.