சென்னை: சாலை விபத்தில் இறந்த திமுக தொண்டர்கள் 3 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக தொண்டர்கள் விபத்தில் இறந்தால் இழப்பீடு தரப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இறந்த தொண்டர்களின் குடும்ப வாரிசுதாரர்கள் 21 வயதுக்கு குறைவாக இருந்தால் ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். சாலை விபத்தில் இறந்த சரவணன், விக்னேஷ், குப்புசாமி ஆகியோர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 6 திமுக தொண்டர்கள் குடும்பங்களுக்கு மொத்தம் ரூ.60 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
+
Advertisement