சென்னை: சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே நேற்று வெளியிட்ட அறிவிப்பு: ஆர்.கே.நகர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2024ம் ஆண்டிற்கான நேரடி சேர்க்கை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று ஆர்.கே.நகர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விரும்புவோர் பொருத்துநர், கம்மியர் மோட்டார் வாகனம், மின்சார பணியாளர் தொழிற்பிரிவுகளில் வருகிற 31ம் தேதி வரை ஆர்.கே.நகர் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்திற்கு நேரில் சென்று விண்ணப்பங்கள் பதிவு செய்யலாம்.
பயிற்சியில் சேரும் மாணவ மாணவிகளுக்கு மாதம் ரூ.750 உதவித்தொகையுடன் விலையில்லா மிதிவண்டி சீருடை காலணிகள், பாட புத்தகங்கள், வரைபட உபகரணங்கள் வழங்கப்படும். அரசு பள்ளியில் பயின்ற மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 கூடுதலாக வழங்கப்படும். பயிற்சியில் சேர பெண்களுக்கு வயது வரம்பு இல்லை. பயிற்சி முடிந்தவுடன் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். சேர்க்கை சம்பந்தமாக சந்தேகம் இருப்பின், ” முதல்வர். ஆர்கேநகர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், எண்.55, கத்திவாக்கம் நெடுஞ்சாலை. சென்னை 600021. தொலைபேசி 044-25911187- 9962452989, 9094370262 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.