பாட்னா: பீகார் சட்டப்பேரவைக்கு வரும் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடக்கிறது. இந்த நிலையில்,ஆர்ஜேடி கட்சி எம்எல்ஏவான பரத் பிந்த் நேற்று எம்எல்ஏ பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். அவர் கட்சியில் இருந்தும் விலகியுள்ளார். இதுகுறித்து பரத் பிந்த் நேற்று கூறுகையில், எம்எல்ஏ பதவியில் இருந்தும் கட்சியில் இருந்தும் ராஜினாமா செய்துள்ளேன். நடைபெற உள்ள தேர்தலில் பாஜ சார்பில் போட்டியிடுவேன் என்றார்.
கடந்த 2020ல் பாபுவா தொகுதியில் இருந்து இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2023ல் மெகா கூட்டணியில் இருந்து விலகிய நிதிஷ்குமார் மீண்டும் பாஜ கூட்டணியில் சேர்ந்தார்.அப்போது முதல் பரத் பிந்த்,ஆளும் கட்சி எம்எல்ஏக்களின் இருக்கையில் அமர தொடங்கினார். அவரை தகுதி நீக்கம் செய்யக்கோரி சபாநாயகரிடம் ஆர்ஜேடி அளித்த மனு இன்னும் நிலுவையில் உள்ளது.