ரிவர் இன்டி நிறுவனம், ரிவர் இன்டி ஜென் 3 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. இதில் 4 கிலோவாட் அவர் பேட்டரி இடம் பெற்றுள்ளது. முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 163 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லலாம். ஹில் ஹோல்ட், இரட்டை எல்இடி ஹெட்லாம்ப், எல்இடி இன்டிகேட்டர் உள்ளன.
இதில் உள்ள இன்ஜின் அதிகபட்சமாக 6.7 கிலோவாட் பவரை வெளிப்படுத்தும். மணிக்கு 90 கிலோ மீட்டர் வேகம் வரை செல்லும். பேட்டரியை 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 5 மணி நேரம் ஆகும். கோம்பி பிரேக் உள்ளது. சீட்டுக்கு அடியில் 43 லிட்டர் கொள்ளவு இடம் உள்ளது. முன்புறம் கிளோவ் பாக்ஸ் 12 லிட்டர் கொள்ளளவு உடையது. 5 வண்ணங்களில் கிடைக்கும். ஷோரூம் விலை சுமார் ரூ.1.46 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.