Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடர்; தங்கம் வென்றார் ரித்திகா: 4வது இடம் பிடித்தது இந்தியா

தாய்லாந்து: தாய்லாந்தில், 22 வயதுகுட்பட்டோருக்கான ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. இதில் மகளிருக்கான 80+ கிலோ எடைப்பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் ரித்திகா 4-1 என்ற கணக்கில் கஜகஸ்தானின் அசெல் டோக்டாசினை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார். மகளிருக்கான 57 கிலோ பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் யாத்ரி படேல் 2-3 என, உஸ்பெகிஸ்தானின் குமோரபோனு மாமஜோனோவாவிடம் தோல்வியடைந்து வெள்ளி பதக்கம் வென்றார். 60 கிலோ பிரிவுக்கான இறுதிப்போட்டியில் இந்தியாவின் பிரியா 2-3 என சீனாவின் யூ டியானிடம் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார்.

ஆண்களுக்கான 75 கிலோ பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் நீரஜ், உஸ்பெகிஸ்தானின் ஷவ்கட்ஜோன் போல்டேவிடம் தோல்வியடைந்து வெள்ளி வென்றார். 90+ கிலோ இறுதிப்போட்டியில் இந்தியாவின் இஷான் கடாரியா, உஸ்பெகிஸ் தானின் கலிம்ஜோன் மாமாசோலியேவிடம் தோல்வி அடைந்தார். போட்டி முடிவில், 22 வயதுகுட்பட்டோர் பிரிவில் ஒரு தங்கம், 4 வெள்ளி, 8 வெண்கலம் என 13 பதக்கத்துடன் இந்தியா 4வது இடம் பிடித்தது.