சென்னை: புதுமணப்பெண் ரிதன்யா தற்கொலை வழக்கில் அவரது கணவர், மாமனார், மாமியார் மூவருக்கும் நிபந்தனை ஜாமின் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கியது. கணவர் கவின் குமார், மாமனார் ஈஸ்வர மூர்த்தி, மாமியார் சித்ரா தேவி மூவரும் காலை, மாலை காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமின் வழங்கியது
திருப்பூா் மாவட்டம், அவிநாசி அருகேயுள்ள கைகாட்டிபுதூரைச் சோ்ந்தவா் அண்ணாதுரை மகள் ரிதன்யா (27). இவா் திருமணமாகி 78-ஆவது நாளில் வரதட்சணைக் கொடுமையால் ஆடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இந்த வழக்கில் கணவா் கவின்குமாா், மாமனாா் ஈஸ்வரமூா்த்தி, மாமியாா் சித்ரா தேவி ஆகியோா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். இவ்வவழக்கில் கணவர், மாமனார், மாமியார் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இதனை விசாரித்த உயர்நீதிமன்றம் கணவர், கணவா் கவின்குமாா், மாமனாா் ஈஸ்வரமூா்த்தி, மாமியாா் சித்ரா தேவி ஆகியோருக்கு இன்று நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. அதன்படி மூவரும் காலை, மாலை போலீசில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.