Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.2 ஆயிரம் லஞ்சம் ஆர்ஐ சஸ்பெண்ட்

திருப்பூர்: இரண்டு ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஆர்ஐ சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்தவர் மைதிலி (43) திருப்பூர் நல்லூர் வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். திருப்பூர் முத்தனம்பாளையம் கிராமம் ரங்கேகவுண்டம்பாளையத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகன் ஜீவா(28). இவரது தந்தை ராஜேந்திரன் கடந்த பிப்ரவரி மாதம் 16ம் தேதி மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார்.

இதற்காக முதலமைச்சர் நிவாரண நிதி பெறுவதற்கு வாரிசு சான்றிதழ் கேட்டு ஜீவா விண்ணப்பித்துள்ளார். பின்னர் வருவாய் ஆய்வாளரிடம் ஒப்புதல் பெற சென்றபோது ரூ.7,000 லஞ்சமாக வருவாய் ஆய்வாளர் மைதிலி கேட்டதாக தெரிகிறது. ஆனால் அவர் ரூ.2,000 தருமாறு கேட்டுள்ளார். இதையடுத்து ரசாயனம் தடவிய ரூ.2 ஆயிரத்தை கடந்த 29ம் தேதி நல்லூரில் உள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த திருப்பூர் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அவரை கைது செய்தனர். இந்தநிலையில் தற்போது மைதிலியை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம் உத்தரவிட்டுள்ளார்.