இஸ்லாமாபாத்: மே 9 பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கடந்த 2023ம் ஆண்டு மே 9ம் தேதி ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டார். இதை தொடர்ந்து இம்ரானின் கட்சி தொண்டர்கள் நாடு முழுவதும் கலவரத்தில் ஈடுபட்டனர். லாகூரில் உள்ள ராணுவ முகாம் பகுதியில் புகுந்த அவரது கட்சி தொண்டர்கள் ராணுவ தளவாடங்களை அடித்து நொறுக்கினர். ராணுவ அதிகாரிகளின் வீடுகளையும் அடித்து சேதப்படுத்தினர். இது தொடர்பான வழக்கில் இம்ரான் கானுக்கு பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
+
Advertisement