Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

உரிமை பயணத்தில் வெற்றி வாகை சூடப்போவது மகளா, மருமகளா என்ற சலசலப்பு மாம்பழக் கட்சியில் ஏற்பட்டிருப்பதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘எல்லாத்தையும் மேல இருக்கிறவன் பார்த்துக்குவான் என்ற கதையா, இலைகட்சி ஆட்சி அமைந்ததும் எல்லாத்தையும் செஞ்சிடுவோம்னு சொல்றாராமே அல்வா ஊர்க்காரர்..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா.

‘‘தமிழகத்தில் மலர படாதபாடுபட்டுக்கொண்டிருக்கும் கட்சியின் தலைவரான அல்வா ஊர்க்காரர், தலைநிமிர பயணம் மேற்கொண்டுள்ளாராம்.. சமீபத்தில் இந்த பயணமாக ‘கடல்’ ஊருக்கு விசிட் அடித்தவர் திட்டக்குடி பெயர் கொண்ட பகுதியில் மக்களை சந்தித்து குறை கேட்டாராம்.. அப்போது காவிரியை வெள்ளாற்றுடன் இணைப்போம்... மக்கா சோளத்தை மதிப்புகூட்ட ஆலை வரும் என வாய்சவாடல் விட்டாராம்.. இதை கேட்டு கூட்டத்தில் இருந்த ஒரு அம்மணி, எங்கள் ஊருக்கு அரசு மருத்துவமனை எப்போங்க வரும்.. என குறுக்கிட இலை ஆட்சி அமைந்தவுடன் உங்க கோரிக்கை எல்லாம் நிறைவேறிடும் என்றாராம்.. அப்போது சட்டென எழுந்த சின்னஞ்சிறுவன் எங்க பள்ளியில் கழிப்பறை இல்லை எனக் கூற விரைவில் கட்டித் தந்திடுவோம் என வாக்குறுதியை அள்ளி வீசினாராம்.. ஆமா மலராத கட்சியின் தலைவர், எல்லாத்தையும் மேல இருக்கிறவன் பார்த்துக்குவான் என்கிற கதையா இலை ஆட்சி அமைந்தவுடன் எல்லாத்தையும் செஞ்சிடுவோம் என்று கூறுகிறாரே, இன்னும் பழைய வீட்டை மறக்கலையோ என முணுமுணுத்தபடி கூட்டத்தில் பங்கேற்றவர்கள் நகர்ந்தார்களாம்.. இதுபற்றிதான் கடல் ஊர் முழுக்க பரவலாக பேச்சு..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘தலைமையிடத்தில் நல்ல பெயர் வாங்க கையிலெடுத்த புதுடெக்னிக்கும் எடுபடாததால் அப்செட்டில் இருக்கிறாராமே மாஜி அமைச்சர்..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.

‘‘டெக்ஸ்டைல்ஸ் மாவட்டத்தில் இலை கட்சியில் உள்ள மாஜி அமைச்சர், மாவட்டத்தில் ஏதாவது செய்து, தலைமையிடத்தில் நல்ல பெயரை வாங்க வேண்டும் என அவரது ஆதரவாளர்களிடம் பேசி வருகிறாராம்.. அதற்காக ஒவ்ெவாரு முறையும் பல டெக்னிக்கை அந்த நிர்வாகி பயன்படுத்தி இருக்காரு.. ஆனால், அது எதுவும் எடுபட மாட்டுங்கதாம்.. தலைமை கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் தற்போது புதுடெக்னிக் ஒன்றை கையில் எடுத்திருக்கிறாரு.. கடந்த ஆட்சியில் இலை கட்சியில் செய்த சாதனைகள் என்ற பெயரில் துண்டு பிரசுரம் வழங்கி வருகிறாராம்.. ஆனால் அந்த துண்டு பிரசுரம் பொதுமக்கள் மத்தியில் எடுபடாததால் அந்த நிர்வாகி அப்செட்டில் இருப்பதாக கட்சிக்குள்ளே அரசல்புரசலாக பேசிக்கிறாங்க..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘சிறையில இருந்து கிரிவலம் மாவட்ட காக்கிகள் துறைக்கு போன கடிதத்தால பரபரப்பு ஏற்பட்டிருக்குதாமே..’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘வெயிலூர் சென்ட்ரல் ஜெயில்ல செல்போன், கஞ்சா நடமாட்டத்தை தடுக்க அடிக்கடி ஆய்வு செஞ்சி பறிமுதல் செய்து வர்றாங்க.. இந்த நிலையில, விசாரணை கைதிகளை கோர்ட்ல ஆஜர்படுத்தி காக்கிங்க அழைச்சிக்கிட்டு போய் வர்றாங்க.. இதுல, வெயிலூர், குயின்பேட்டை, மிஸ்டர்பத்தூர் மாவட்ட கோர்ட்டுகள்ல ஆஜர்படுத்தும் விசாரணை கைதிகளிடம் கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்படவில்லையாம்.. ஆனா, கிரிவலம் மாவட்டத்திற்கு விசாரணைக்கு அழைத்து செல்லப்படும் விசாரணை கைதிகள் திரும்பி ஜெயிலுக்கு வரும்போது, உடலுக்குள் மறைச்சி கஞ்சா கடத்தி வந்ததாக 5க்கும் மேற்பட்ட கைதிகள் சிக்கியிருக்காங்க.. இதனால சந்தேகமான சிறை ஆபிசருங்க, விசாரணை நடத்தியிருக்காங்க.. அதுல, தீப மலை மாவட்ட கோர்ட்டுக்கு போய்ட்டு வர்ற கைதிங்க, கஞ்சா கடத்த காக்கிகள் உதவி செய்றதாக தெரிய வந்திருக்குதாம்.. இதனால, சிறை நிர்வாக சார்புல, கிரிவலம் காக்கிகள் துறைக்கு கஞ்சா கடத்த உதவுற காக்கிகள் மேல நடவடிக்கை எடுக்கணும்னு கடிதம் எழுதி அனுப்பி வெச்சிருக்காங்களாம்.. இந்த கடிதம் தான் சிறை காக்கிகள், கிரிவலம் மாவட்ட காக்கிகள் மத்தியில பரபரப்ப ஏற்படுத்தியிருக்குதாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘உரிமை பயணத்தில் வெற்றி வாகை சூடப்போவது மகளா, மருமகளா என்ற சலசலப்பு மாம்பழக் கட்சியில் ஏற்பட்டிருக்காமே..’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘மாம்பழக் கட்சியில் சின்னம் யாருக்கு என்ற போட்டியில் அன்பு மகன் வெற்றிவாகை சூடிட, டெல்லியிலே தந்தையானவரின் விசுவாசி மணி ஆனவர் முகாமிட்டு அடுத்தடுத்த வேலைகளை செய்து வருகிறாராம்.. போராட்டம் ஒருபுறம், மறுபுறம் போலி ஆவணங்களை சமர்ப்பித்து மோசடி செய்ததாக காக்கியிடம் புகார் அளித்துள்ளாராம்.. ஆனால் அன்பு மகன் ஆனவரோ எதைப் பற்றியுமே கவலைப்பட வில்லையாம்.. கணவருக்கு ஆதரவாக சவுந்தர்யமான பசுமை மனைவி மீட்பு பயணத்தை காஞ்சியில் துவங்கி உள்ளாராம்.. அதுவும் மகளிரின் 10 உரிமைகளுக்கான பயணமாம்.. ஏற்கனவே சவுந்தர்யமான மருமகளால்தான் கட்சி உடைந்து கிடப்பதாக கொந்தளிப்பில் இருக்கும் மூத்த நிர்வாகிகளில் சிலர் போட்டி பயண வியூகம் வகுத்து உள்ளார்களாம்.. விரைவில் தந்தையின் மூத்த மகளான காந்தியின் பயணமும் தொடங்க இருக்கிறதாம்.. அது அரை நூற்றாண்டு காலமாக பாடுபட்டு உழைத்த தந்தையின் கட்சி, சின்னத்தை மீட்டெடுக்கும் உரிமை பயணமாக இருக்குமாம்.. இதில் வெற்றிவாகை சூடப்போவது மகளா, மருமகளா என்ற சலசலப்பு மாம்பழக் கட்சி வட்டாரத்தில் பரவலாக எழுந்துள்ளதாம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.