டோக்கியோ: உலகின் மிக விலை உயர்ந்த அரிசி ஜப்பானில் விளைவிக்கப்படுகிறது. இதன் விலை ஒரு கிலோ ரூ.12,500 ஆக உள்ளது. அதிநவீன தொழில் நுட்பம் மற்றும் அரிசி-பஃபிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புதிய ரக அரிசி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. கின்மேமாய் பிரீமியம் என அழைக்கப்படும் அரிசி தான் உலகில் மிகவும் ஆடம்பரமான விலையுயர்ந்த அரிசியாக பார்க்கப்படுகிறது. அரிசி உற்பத்தியை மேம்படுத்த 2016ம் ஆண்டு கின்மேமாய் பிரீமியம் ரக அரிசி அறிமுகம் செய்யப்பட்டது. அப்போதே 840 கிராம் அரிசி ரூ.5490 க்கு விற்பனை செய்யப்பட்டது.
அப்போதே இந்த அரிசி அதிக விலையுள்ள அரிசி என்று கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தது. இப்போது அதே ரக அரிசி மேம்படுத்தப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன் விலை ஒரு கிலோ ரூ.12,500 ஆகும்.ஜப்பானிய கின்மேமாய் பிரீமியம் அரிசி ஒரு மேம்படுத்தப்பட்ட மில் மூலம் தவிடு நீக்கப்படுகிறது. எனவே இந்த அரிசியை சமைப்பதற்கு முன் கழுவ வேண்டிய அவசியமில்லை. வழக்கமான அரிசியில் நோய் எதிர்ப்பு தன்மையை கொடுக்கக்கூடிய lipopolysaccharides புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள கின்மேமாய் ரகத்தில் 6 மடங்கு அதிகமாக இருக்கிறது. அதோடு கின்மேமாய் ரக அரிசி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், உடலில் உள்ள நோய்களை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது.

