சென்னை: பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில், துறை சார்பான திட்டப் பணிகளும் மற்றும் எதிர்வரும் பண்டிகையை முன்னிட்டு ஆவினில் இனிப்பு வகைகள் விற்பனை குறித்த ஆய்வுக்கூட்டம் சென்னை, நந்தனம் ஆவின் இல்லத்தில் நடைபெற்றது. ஆய்வு செய்ததுடன் நடப்பாண்டில் சென்ற ஆண்டை விட சராசரியாக 1.68 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் உயர்ந்துள்ளது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில், பால்வளம் மற்றும் பால் பண்ணை மேம்பாட்டு துறை மூலம் செல்லப்படுத்தபடும் திட்டங்கள், பால் கொள்முதல் மற்றும் பண்டிகை கால இனிப்பு தயாரிப்பு பணிகள் குறித்து அனைத்து மாவட்ட பொது மேலாளர்கள், துணைப் பதிவாளர்களுடன் ஆய்வுக்கூட்டம் இன்று (25.09.2025) சென்னை, நந்தனம் ஆவின் இல்லத்தில் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் பால்வளத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது. மாவட்ட ஒன்றியங்களிளும் மொத்த பால் குளிர்விப்பு மையங்களிலும் (BMC) மற்றும் தொடக்கப் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் பாலின் அளவு மற்றும் தரம் குறித்த உடனடி ஒப்புகைச் சீட்டு (spot acknowledgement) வழங்கவும்.
சங்க உறுப்பினர்களுக்கு 10 நாட்களுக்குள் பால் பணம் பட்டுவாடா நிலுவையின்றி வழங்கிட வேண்டும் என்று அறிவுறுத்தினார். அரசு வழங்கும் ஒரு லிட்டருக்கான ரூ.3/-ஊக்கத்தொகையினை பால் உற்பத்தியாளர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும். அமைச்சர் நடப்பாண்டில் 12.09.2025 வரை 17,68,671 கால்நடை விவசாயிகளுக்கு தேசிய மற்றும் கூட்டுறவு வங்கிகள் மூலம் கால்நடை பராமரிப்பு கடன் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்கள். மேலும் தாட்கோ, டாப்செட்கோ கால்நடை கடன் வழங்கிட அனைத்து உற்பத்தியாளர்களிடமும் விண்ணப்பம் பெற்று உரிய துறைக்கு அனுப்பிடவும் அறிவுறுத்தினார்கள். மேலும் பால் உபபொருட்களின் விற்பனையை அதிகரிக்கவும் ஒன்றியங்கள் இலாபத்தில் செயல்பட பொது மேலாளர்கள் முனைப்புடன் செயல்படவேண்டும் என்றும், பால் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில், பால் உற்பத்தியாளர்களுக்கு நியாயமான விலையில் கால்நடை தீவனம், தாது உப்பு கலவை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தினார்கள்.
மேலும் தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் அரசு மின்னணு சேவை மையம், பால்வளத்துறை மூலம் வழங்கப்படும் கால்நடை தீவனம், இடுபொருட்கள், பால் உபபொருட்கள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் தயாரிக்கப்படும் பொருட்கள், மைக்ரோ ஏடிஎம் என பலவகை மையங்களாக உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், என்றும் சட்டமன்ற அறிவிப்புகள் மற்றும் திட்டங்களை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் அறிவுறுத்தினார். தொடர்ந்து, பண்டிகை காலங்களில் பொது மக்களுக்கு தரமான இனிப்பு மற்றும் கார வகைகளை தயாரிக்கவும், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தீபாவளி விற்பனையை அதிகப்படுத்த வேண்டும் எனவும் அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு தேவையான தீபாவளி இனிப்புகளை வழங்க முன்கூட்டி திட்டமிட வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்கள்.
எதிர்வரும் பண்டிகை காலங்களில், பால் மற்றும் பால் உபப்பொருட்கள் தட்டுப்பாடு இல்லாமல் மக்களுக்கு கிடைக்க வழிவகை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளவும், தீபாவளி சிறப்பு இனிப்பு வகைகளை சந்தைப்படுத்துதலை சிறப்பு குழுக்கள் அமைத்து அதிகரிக்க வேண்டும் என அமைச்சர் அறிவுறுத்தினார். மேலும் கடத்த ஆண்டை விட தற்பொழுது 1.68 இலட்சம் லிட்டர் பால் கொள்முதல் சராசரியாக அதிகரித்து உள்ளது. ஆவின் நிறுவனத்திற்கு பால் வழங்கி வரும் பால் உற்பத்தியாரகளுக்கு இதுவரை ரூ.636 கோடி ஊக்க தொகையாக வழங்கப்பட்டுள்ளது என அமைச்சர் தெரிவித்தார்கள். இக்கூட்டத்தில், கால்நடை பராமரிப்பு. பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அரசுச் செயலாளர் மருத்துவர் ந.சுப்பையன், இ.ஆ.ப., . காவல்துறை இயக்குநர் மற்றும் முதன்மை விழிப்புக்குழு அதிகாரி திரு.ராஜீவ் குமார். இ.கா.ப., , பால்வளத்துறை ஆணையர் மற்றும் மேலாண்மை இயக்குநர் திரு.ஆ.அண்ணாதுரை.இ.ஆ.ப., , மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.