சென்னை: வருவாய்த்துறை அலுவலகங்களில் ஆவணங்கள் மாயமானால் நடவடிக்கை வேண்டும் என மாநில தகவல் ஆணையம் தெரிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பட்டா உள்ளிட்ட நில உடமை ஆவண கோப்புகள் காணாமல் போனால் நடவடிக்கை மேக்ரோள்ளப்படும் எனவும் மாநில தகவல் ஆணையம் தெரிவித்துள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அன்புவேல் என்பவர் மாநில தகவல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். மனுதாரர் கேட்ட தகவல்கள் கிடைக்கவில்லை என்று தகவல் அலுவலர் கூறுவது அலட்சியப்போக்கு என தகவல் ஆணையம் தெரிவித்துள்ளது.
+
Advertisement