சென்னை: தெலங்கானா முதல்வர் அனுமுலா ரேவந்த் ரெட்டி மகிழ்ச்சியோடும், நல்ல உடல்நலத்தோடும் மக்கள் பணி செய்ய வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை: தெலங்கானா முதல்வர் அனுமுலா ரேவந்த் ரெட்டிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் மகிழ்ச்சியோடும், நல்ல உடல் நலத்தோடும் இன்னும் பல்லாண்டுகள் மக்கள் பணியில் ஈடுபட்டு சிறந்திட விழைகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
+
Advertisement

