சென்னை: ஓய்வு ஊதிய திட்டம் குறித்து ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவிடம் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கோரிக்கை மசோதா கொடுத்தனர். சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று காலை 11 மணி அளவில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களை சந்தித்து கோரிக்கை மனுக்கள் பெறவும், அவர்கள் தரப்பு பிரச்னைகளை கேட்கவும் அழைப்பு விடுத்தது.
அதன் பேரில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஒருங்கிணைப்பாளர்கள் ஓய்வு ஊதியக் குழுவை சந்தித்து கோரிக்கைகள் அடங்கிய 10 பக்கம் கொண்டு கோரிக்கை மசோதாவை கொடுத்தனர். அதில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் உரிமைகள் மற்றும் ஊதிய உயர்வு, பதவி உயர்வு மற்றும் ஓய்வு ஊதியம் வழங்கப்பட்ட முறைகள் குறித்த வரலாற்று நிகழ்வுகளை பட்டியலிட்டுள்ளனர். மேலும், பழைய ஓய்வு ஊதியத்தின் முக்கியத்துவம் குறித்தும் தெளிவான விளக்கங்களையும் அதில் குறிப்பிட்டுள்ளனர்.